"சினிமா என் தொழில்"
கல்வி பொறியியல் பட்டம். ஓராண்டு காலம் வேலை நிமித்தம் சென்னையிலிருந்த அந்த காலக்கட்டம்
தான் என் அடுத்த கட்ட வாழ்க்கைப் பாதைக்கு அழைத்து வந்தது. பெரும்பாலும்
சினிமாவை விரும்புபவர்கள் சினிமா தொழிலை விரும்புவதில்லை. காரணம் என்பது
ஒருவருகொருவர் வித்தியாசப்பட்டாலும்
இரு காரணங்களில் ஒத்துபோகிறார்கள். ஒன்று சினிமா என்பது போட்டி நிறைந்த
தொழில்.
மற்றொன்று மதுவும் மாதுவும் எளிதில் பழகிக் கொள்ளும்
இடம் என்பதில் அவர்களுக்கெல்லாம் இன்றுவரை இருக்கும்
நம்பிக்கையிலிருந்து அவர்கள் மாறவேயில்லை. அப்படி நினைத்துக்
கொண்டிருப்பவர்கள் மத்தியில் இருந்து, படிப்பிற்கான வேலையை துறந்து,
ராஜ துறவியாய்... திரைப்பட உதவி இயக்குனராய் வாய்ப்புகளுக்காக
காத்திருக்கும் கே.எஸ்.ராஜ்குமார்- ஆகிய நான் "தமிழ் சினிமாவின் இன்னொரு
பரிணாமத்தை ரசிகர்களுக்கு கொடுத்த முதல் தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பி.
நடராஜ முதலியார், சங்கர், பீம்சிங், திரிலோக சந்தர், கே.பாலசந்தர், சிறீதர்,
உதிரி பூக்கள் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா, அமீர்... என நீளும்
இயக்குனர்கள் வரிசையில் என்னையும் இணைத்துக் கொள்வதே என் விருப்பம். என் நம்பிக்கை.
"நான் போராட வரவில்லை, போரிட வந்திருக்கிறேன். வெற்றி அல்லது வீர மரணம்"
No comments:
Post a Comment