Friday, January 15, 2010

சிவா சிவா

ஆசைக்குள் அடிபட்ட ஆணும்பெண்ணும்
ஆக்கிவைத்து ஆடவந்த குப்பை தேகம்
எப்போதும் சிற்றின்ப வழியில்நிற்கும்
மறவாதே மறவாதே அதனால் துன்பம்
கற்றிடுவாய் பல நூல்கள் அதனை போக்க
கருத்ததனை உள் வைப்பாய் சொல்லசொல்ல
வாயதனை திறக்காதே குறைகள் பேச
செவி உணர நற்சொற்கள் கேளாய் கேளாய்
முர்க்ககுணம்விட்டொழித்து அமைதி தேடு
மும்மலமும் தீண்டாது ஞானம் காண்பாய் .


சிவா சிவா

Wednesday, January 13, 2010

சிவா சிவா

பற்றனைத்தும் விட்டுப்பார் பரமஞானம் கிட்டும் கிட்டும்
பழி பாவம் அணுவும் இன்றி துயர்கள் நீங்கும்
தொட்டுஎடுத்து செய்வதெல்லாம் ஒளியாய் மாறும்
தொடராது மறுபிறப்பு ஞானம் கிட்டும்
விட்டகலும் தீவினையும் பிணியும் அதனால்
சுற்றாதே சிற்றின்ப ஆசைபின்னே.

சிவா சிவா

Saturday, May 24, 2008

தோழி வித்யாவின் சந்திப்பு

2௪.௫ ௨00௮ (ஞாயிறு) மாலை௪.௧௬. எங்கள் இருவரின் இரண்டு நாள் அலைபேசி அறிமுகங்களுக்கு பிறகு நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறோம். இங்கு "கிழ்க்கு பதிப்பகத்தாருக்கும், நண்பர் பாலபாரதிக்கும்" என் நன்றிகள். இருவரும் எங்கள் சந்திப்புக்கு உதவியவர்கள். "பால்" திரைப்பட அலுவலகம் - இயக்குனர் சிவக்குமாரும் தோழி வித்யா மற்றும் சில உதவி இயக்குனர்கள் என, அந்த இடத்தில்- முக மலர்ச்சியோடு என்னை வரவேற்ற வித்யாவின் முகத்தை, முதன் முதலாக நேரிடையாக பார்த்த என் கண்கள் - அப்படியே பதிவு செய்து என் மூளை நரம்புகளில் மட்டுமல்லாமல் இதயத்திலும் சேமித்துக் கொண்டதில்... எனக்கு பெருமிதம், மகிழ்ச்சி. சில நிமிட உரையாடல்... 2௫ நிமிடங்களில் நான் பணிக்கு திரும்பினேன்... அவளும். இரவு 10 மணி... லிவிங் ஸ்மைல் வலைப்பூவில் என் நண்பன் பெரிய பத்மனாபனோடு - என் தோழி வித்யாவின் சில வெளியீடுகளை படித்து உணரும் போது, அடுத்து நல்ல ஒரு நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் லிவிங் ஸ்மைல்-க்கு பதில் அனுப்பி வைத்தேன். அப்போது அதிகாலை (இரவு) ௩ மணி. (௨௫.௫.2008)... "நட்பு இனி" எங்களை வழி நடத்தும்...

Sunday, March 9, 2008

நான் ரசித்த முதல் கவிதை

அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவிலும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
.........................................................- மகாகவி பாரதி