ஆசைக்குள் அடிபட்ட ஆணும்பெண்ணும்
ஆக்கிவைத்து ஆடவந்த குப்பை தேகம்
எப்போதும் சிற்றின்ப வழியில்நிற்கும்
மறவாதே மறவாதே அதனால் துன்பம்
கற்றிடுவாய் பல நூல்கள் அதனை போக்க
கருத்ததனை உள் வைப்பாய் சொல்லசொல்ல
வாயதனை திறக்காதே குறைகள் பேச
செவி உணர நற்சொற்கள் கேளாய் கேளாய்
முர்க்ககுணம்விட்டொழித்து அமைதி தேடு
மும்மலமும் தீண்டாது ஞானம் காண்பாய் .
Friday, January 15, 2010
Wednesday, January 13, 2010
சிவா சிவா
பற்றனைத்தும் விட்டுப்பார் பரமஞானம் கிட்டும் கிட்டும்
பழி பாவம் அணுவும் இன்றி துயர்கள் நீங்கும்
தொட்டுஎடுத்து செய்வதெல்லாம் ஒளியாய் மாறும்
தொடராது மறுபிறப்பு ஞானம் கிட்டும்
விட்டகலும் தீவினையும் பிணியும் அதனால்
சுற்றாதே சிற்றின்ப ஆசைபின்னே.
பழி பாவம் அணுவும் இன்றி துயர்கள் நீங்கும்
தொட்டுஎடுத்து செய்வதெல்லாம் ஒளியாய் மாறும்
தொடராது மறுபிறப்பு ஞானம் கிட்டும்
விட்டகலும் தீவினையும் பிணியும் அதனால்
சுற்றாதே சிற்றின்ப ஆசைபின்னே.
Subscribe to:
Posts (Atom)